சென்னை: அண்ணா பல்கலைக்கழக பகுதி நேர பி.இ., படிப்பில் சேர, அக். 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான (மாலை நேர வகுப்புகள்) விண்ணப்பங்கள், தேர்வு மையத்தில் வழங்கப்படுகின்றன.
பொதுப்பிரிவு மாணவர்கள் 500 ரூபாயும், எஸ்.சி., - எஸ்.டி., - எஸ்.சி.ஏ., மாணவர்கள் 250 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 19ம் தேதி மாலை 5:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பகுதி நேர பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர விரும்புபவர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக குறிப்பிட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் டிப்ளமா முடித்திருக்க வேண்டும். இப்படிப்பு மூன்றரை ஆண்டுகள் (ஏழு செமஸ்டர்கள்) வழங்கப்படும்.
வார நாட்களில் மாலை 6:15 மணி முதல் 9:15 மணி வரை வகுப்புகள் நடைபெறும். பேராசிரியர்களின் முடிவுக்கு ஏற்ப, ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை நாட்களிலும் வகுப்புகள் நடைபெறும்.
பல்கலையிலிருந்து 90 கி.மீ., தொலைவுக்குள் பணிபுரிபவர்கள் மட்டுமே, இந்த பகுதி நேர பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்த்து கொள்ளப்படுவர்.
வயது உச்சவரம்பு கிடையாது.
டிப்ளமா தேர்வு மதிப்பெண் 75 சதவீதம், பணி அனுபவம் 25 சதவீத அடிப்படையில் தகுதி கணக்கிடப்பட்டு, ‘மெரிட்’ அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் ( www.annauniv.edu/ptbe2010 ) தெரிந்து கொள்ளலாம்.
Labels:
Education news.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பகுதிநேர பி.இ., அட்மிஷன்
Posted by
Campus Front Tamilnadu
Thursday, October 14, 2010
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Popular Posts
-
கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் karaikal youth empowerment society இணைந்து நடத்திய 10 ஆம் வகுப்பு ,+1,+2 , மாணவ மாணவிகளுக்கான ( மேற்பப...
-
சென்னை மற்றும் கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக பல உதவிகள் செய்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை ம...
Career Guidance Book
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் "நாமும் சாதிக்கலாம்" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.
0 comments :
Post a Comment