Labels:

நிறுவன படுகொலைக்கு எதிரான போராட்டம்

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மாவட்டம் சார்பாக காவி வெறிக்கு பலியான ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் படுகொலைக்கு எதிராக இன்று(19.1.16) அன்று மதியம் 2.30மணியளவில் தமுக்கம் எதிரில் உள்ள BSNL அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது இதற்கு மாவட்ட தலைவர் இப்ராஹிம் தலைமை தாங்க,சிறப்பு அழைப்பாளராக மாநில துணைதலைவர் பக்ருதீன் உட்பட ஏராளமான மாணவர்கள்கலந்து கொண்டனர. கலந்து கொண்ட மாணவர்கள் இறுதியாக கைது செய்யப்பட்டனர்.













Labels:

கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவள்ளூர் மாவட்டம் சார்பாக மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட அரசு பள்ளியில் தங்கள் நோட்டு புத்தகங்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது இதில் மாவட்ட தலைவர் தோழர் ரஹ்மத்துல்லாஹ், மண்டல செயலாளர் அக்பர் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்துகொண்டு வழங்கினர்
















Labels:

கல்வி உதவிதொகை மற்றும் உயர்கல்வி நுழைவு தேர்வுக்கான நிகழ்ச்சி

ஜனவரி 1௦ ம் தேதி ஆலிம் முஹம்மது ஸாலிஹ் பொறியியல் கல்லூரியின் MCA துறையின் உதவி பேராசிரியர் சகோதரர் ரபீக் அவர்கள் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவிதொகை மற்றும் உயர்கல்வி நுழைவு தேர்வுக்கான வழிமுறைகளை விளக்கமாக வகுப்பு எடுத்தார்கள்











Labels:

கல்வி கற்க ஊக்குவிக்கும் முகாம்







கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தென்சென்னை மாவட்டம் மற்றும் அக்செஸ் இந்தியா  (Access India  ) இனைந்து மாணவர்கள் இலக்கு எப்படி இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் மேற்ப்படிப்புகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும், கல்வி கற்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் முகமாக நிகழ்ச்சியை திருவல்லிக்கேணியில் உள்ள முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் (07/01/16) அன்று பத்தாம் வகுப்பு படிக்கும் மாணர்களுக்கு நடத்தப்பட்டது இந்த நிகழ்சிக்கு தென் சென்னை மாவட்ட தலைவர் தோழர் அத்னான் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக சென்னை மண்டல செயலாளர் தோழர் அக்பர் கலந்துகொண்டார் இவ்வகுப்பினை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில குழு உறுப்பினரும் அக்செஸ் இந்தியாவின் பயிற்சியாளருமான தோழர் தமீம் சிறப்பாக நடத்தினார் . மாணவர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்

Labels:

கல்வி கற்க ஊக்குவிக்கும் முகாம்









கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவள்ளுர் மாவட்டம் மற்றும் அக்செஸ் இந்தியா அமைப்புகள் இனைந்து மாணவர்கள் இலக்கு எப்படி இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் மேற்ப்படிப்புகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதின் தெளிவுரை நிகழ்ச்சியை திருவல்லாங்காடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் (07/01/16) அன்று பத்தாம் வகுப்பு படிக்கும் மாணர்களுக்கு Career giuidance நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் 70 க்கும் மேற்ப்பட்டட மாணவர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்

Labels:

கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி








மழை வெள்ளத்தால் நோட்டு புத்தகங்கள் இழந்த மாணவர்களுக்கு கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா திருவள்ளுர் மாவட்டம் சார்பாக ரெட்ஹில்ஸ் பகுதியில் (06/01/16) அன்று கல்விக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியாவின் . மாவட்ட தலைவர் ரஹமத்துல்லா அவர்களும் SDPi கட்சியின் மாதாவரம் தொகுதி தலைவர் சாதிக் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கினர்.இதில் 50 மாணவர்கள் பயனடைந்தனர்