Labels:

கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் `மனு கொடுக்கும் போராட்டம்`

திருச்சி அரசு பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு பிசியோதெரபி படித்தவரை (Physiotherapist) முதல்வராக நியமிப்பது, நிரந்தர பேராசியர்களை நியமிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28.02.2011 முதல் உண்ணாவிரப் போராட்டம்  நடத்தினர். ஆனால் அரசு மாணவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாததால் கடந்த 3.02.2011 அன்று கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில்  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கேம்பஸ் ப்ரண்ட் மாநில பொதுச் செயலாளர் Z. முஹம்மது தம்பி தலைமையில் `மனு கொடுக்கும் போராட்டம்` நடைபெற்றது. 



0 comments :

Post a Comment