Labels:

நெல்லை சித்த மருத்துவ கல்வி போராட்டம் – கேம்பஸ் ஃப்ரண்ட் ஆதரவு!



நெல்லை சித்த மருத்துவ கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களின் வகுப்புகளை மீண்டும் ஆரம்பம் செய்யுமாறு சித்த கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். இதற்கு கேம்பஸ் ப்ரண்ட் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

 சில மாதங்களுக்கு முன்பு மத்திய மருத்துவ கவுன்சில், அடிப்படை வசதிகள் இல்லாத 160 கல்லூரிகளின் உரிமைகளை ரத்து செய்தது. இதில் நெல்லையை சேர்ந்த அரசு சித்த மருத்துவக் கல்லூரியும் ஒன்றாகும். இந்த அறிக்கை அனைத்து கல்லூரிக்கும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் தமிழக அரசு இந்த ரத்து சம்பந்தப்பட்ட அறிக்கையை கண்டுகொள்ளாமல், 2011 - 2012 க்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது. மாணவர்களின் சேர்க்கையின் போதே, மாணவர்கள் ரத்து செய்தது தொடர்பாக வினவிய போது இதனை பற்றி வினா எழுப்புவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை, இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று மாநில அரசு தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக எந்த கேள்வியும் கேட்கமாட்டோம் என மாநில அரசு மாணவர்களின் சேர்க்கையின் போதே கையெழுத்து வாங்கியது. 

தற்போது அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் உரிமைகளை ரத்து செய்தது நீதிமன்றம் உத்தவு பிறப்பித்துள்ளது. இது தீர்ப்பை தொடர்ந்து மாணவர்கள் தமிழக சுகாதார அமைச்சரை நேரில் சந்தித்து பேசிய போது, அவர் இதற்கும் மாநில அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை இது மத்திய அரசு சம்பந்தப்பட்டது என எந்த ஒரு கவலையும் இல்லாமல் பதிலளித்துள்ளார். இதானால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பிப்ரவரி 6 முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று வரை மாநில அரசு இதற்கு எந்த ஒரு தீர்வையும் எடுக்கவில்லை. தற்பொழுது மருத்துவ கவுன்சிலிங் மூலம் சேர்ந்த 150 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 

இதனை தொடர்ந்த கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயலாளர் திரு.K.காசிம் அராபாத், நெல்லை மாவட்ட தலைவர் திரு.K.S.தமீம் அன்சாரி மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் போராட்டம் நடத்தும் மாணவர்களை நேரில் சந்தித்து, மாணவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் வரை கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா மாணவர்களுடன் போராடும் என தெரிவித்தார். மேலும் மாநில செயலாளர் கூறுகையில் "மத்திய, மாநில அரசுகள் கல்வியை வியாபாரமாகும் நோக்கத்துடன் 1980 முதல் செயல்பட்டு வருகின்றது. இதில் ஒரு பகுதியாக மாநில அரசு கல்வியை தனியார் நிர்வனங்களுக்கு தாரை வார்த்துள்ளது. அரசு நடத்தக் கூடிய கல்விக்கூடங்களை தனியாருக்கு தாரைவார்த்தும், தனியாரே நடத்தக் கூடாத மதுக் கடைகளை மாநில அரசும் நடத்தி வருகின்றன. மாணவர்களில் நலனை கருதாமல் அரசின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கோடு மாநில அரசும், மத்திய அரசும் செயல்பட்டு வருகின்றது. இதனை கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாத பல தனியார் கல்லூரிகள் இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். அதன் மீது மத்திய மாநில அரசுகள் எந்த ஒரு தடையும் கூறவில். அரசின் வருமானைத்தை அதிக அளவில் ஈட்டுத் தராத அரசு கல்லூரிகள் மீது மட்டும் இத்தகைய தடையை மாநில மத்திய அரசு அறிவித்து வருகின்றனர். அரசு கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் போனதற்கு காரம் மத்திய,மாநில அரசாங்கம். மத்திய,மாநில அரசின் வியாபார நோக்கத்தை கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது மேலும் தற்போது அமலில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரின் தடையை ரத்துசெய்து மாணவர்களின் வகுப்புகளை மீண்டும் தொடங்க வேண்டும் இல்லையென்றால் மாநில அளவில் கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா ஆர்ப்பாட்டங்களை நடத்தும்." என அவர் கூறினார். 

அரசு அடிப்படை வசதிகள் என்று குறிப்பிட்ட அனைத்தையும் நிவர்த்தி செய்த பிறகும் அரசு சித்த கல்லூரியை செயல்படுத்த அரசு முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment