Labels:

வட இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் - தனது பெயரை குற்றப்பத்திரிக்கையில் இருந்து நீக்க ராஜ் தாக்கரே விண்ணப்பம்


கடந்த 2008 ஆம் ஆண்டு ரயில்வே தேர்வு எழுத வந்த வட இந்திய மாணவர்கள் மீது வன்முறையை தூண்டிவிட்டது தொடர்பாக போடப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் இருந்து தனது பெயரை நீக்க வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே கல்யான் ரயில்வே நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளா. 

அக்டோபர் 22 , 2008  ஆண்டு ரயில்வே தேர்வு எழுதவந்த வட இந்திய மாணவர்கள் மீது ராஜ் தாக்கரேவின் உத்தரவின் படி காழ்ப்புணர்வை தூண்டிவிட்டு, அந்த மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்களை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா உறுப்பினர்கள் நடத்தினர்.தற்போது இந்த வழக்கு தொடர்பாக குட்ட்ரப்பத்திரிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
இந்த குற்றப்பத்திரிக்கையில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரேவிற்கு எதிராக தானாக முன்வந்து மக்கள் மத்தியில் விரோதம் அல்லது வெறுப்பை ஊக்கவிப்பது, கொலை மிரட்டல்  உள்ளிட்ட இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (IPC) கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  
   
ராஜ் தாக்கரே பாதுகாப்பு காரணமாக தனது பெயரை நீதிமன்ற விசாரணையில் இருந்து நிரந்தரமாக விலக்க கோரி தனது வழக்கறிஞர் சுகாஸ் மூலம் கல்யான் ரயில்வே நீதி மன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இத்துணை பற்றி அவரது வழக்கறிஞர் சுகார் கூறுகையில் "ராஜ் தாக்கரேவுக்கு இந்த தாக்குதலில் தொடர்புள்ளது என எந்த ஒரு நேரடி ஆதராங்களும் இல்லை, மேலும் ராஜ் தாக்கரேவுக்கு எதிராக எந்த சாட்சியும் இல்லை. இதனடிப்படையில் குற்றப்பத்திரிக்கையில் இருந்து ராஜ் தாக்கரேவின் பெயரை நீக்க வேண்டும்".

இந்த வழக்கு மே 6 அன்று விசாரணைக்கு உள்ளது. ஜுன் 2009 அன்று இந்த வழக்கு தொடர்பாக ராஜ் தாக்கரேவுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு ஜாமீன் வழங்கப்பட்டது.   

0 comments :

Post a Comment