Labels:

பள்ளிக் கல்வித்துறைதான் முடிவெடுக்க வேண்டும்: ஐகோர்ட்


நடத்தக் கோரிய மனு மீது, பள்ளி கல்வித்துறை முடிவெடுக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்  காசிநாதபாரதி தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: மாணவ சமுதாயத்துக்கு முறையான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. சமீபத்தில் சென்னை பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை ஒருவரை, மாணவனே கொலை செய்துள்ளான். மாணவன் தற்கொலை, நான்கு மாணவர்கள் சேர்ந்து ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது, பள்ளி மாணவன் வைத்திருந்த பீர் பாட்டில் வெடித்து இறந்தது என, பல சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்தச் சம்பவங்கள் எல்லாம், அந்த மாணவர்கள் பிறந்து வளர்ந்த முறையை காட்டுகிறது. மேலும் முறையான கல்வி, குறிப்பாக நீதி போதனை பாடங்களை, மாணவர்களுக்கு நடத்தாததன் விளைவும் இதற்கு காரணம். தற்போதைய கல்வி முறையில் நீதி போதனை பாடங்கள் நடத்தப்படுவதில்லை. பல பள்ளிகளில் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்படுவதில்லை.
மன உளைச்சலை சரிப்படுத்திக் கொள்ள உடற்கல்வி மிகவும் அவசியம். யோகா வகுப்புகள், நூலகத்தை பயன்படுத்துவது, இதன் மூலம் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும். பல பள்ளிகளில் அடிப்படை வசதிகளை கூட மாணவர்களுக்கு வழங்குவதில்லை.
மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள், உடற்கல்வி, யோகா, நூலக வசதிகளை அளிக்கும் வகையில் தொடக்கக் கல்வி முறையை மறு ஆய்வு செய்யக்கோரி, மனு அனுப்பினேன். என் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜரானார். முதல் பெஞ்ச் உத்தரவில், 'கோர்ட் உத்தரவின் நகலை, முறையீட்டு மனுவோடு சேர்த்து, பள்ளி கல்வித் துறை செயலர், இயக்குனரிடம் மனுதாரர் அளிக்க வேண்டும். மனுதாரர் எழுப்பியுள்ள பிரச்சினைகளை அதிகாரிகள் விவாதித்து, சட்டப்படி முடிவெடுக்க வேண்டும்&' எனக் கூறியுள்ளது.
dinamalar

0 comments :

Post a Comment