Labels:

தேர்ச்சி விகித வெறி:அரசு பள்ளிகளில் பரவும் தனியார் பள்ளிகளின் ஃபோபியா!

திருநெல்வேலி:தமிழக பள்ளிக்கூடங்களில் வருகிற ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு(S.S.L.C) தேர்வுகள் துவங்கவிருக்கும் வேளையில் சில பள்ளிகூடங்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களில் சிலரை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
தனியார் பள்ளிகளை பீடித்திருந்த 100 சதவீத தேர்ச்சி ஃபோபியா தற்பொழுது அரசுப் பள்ளிகளிலும் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்களின் பொதுத்தேர்வின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் பள்ளி நிர்வாகங்கள் இப்படியான சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த இப்படியானதொரு சம்பவத்தில் தலையிட்ட தேசிய குழந்தைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதி ஹென்றி டிபேன், பாதிக்கப்பட்ட பத்தொன்பது மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி பெற்றுத் தந்ததாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் வியாபார நோக்கில் நடத்தப்படும் தனியார் பள்ளிகளில் காணப்பட்ட இந்த போக்கு, தற்போது அரசு பள்ளிகளிலும் பரவி வருவதாக கூறுகிறார் ஹென்றி டிபேன்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்கள் படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
thoothu

0 comments :

Post a Comment