Labels:

கல்வி வழிகாட்டி & இலக்கு நிர்ணயித்தல் முகாம்"

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவாரூர் மாவட்டம் மற்றும் ஆக்சஸ்(Access) இந்தியா இணைந்து, மாணவர்களின் இலக்கு எப்படி இருக்க வேண்டும் , மேற்படிப்புகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும் மற்றும் கல்வி கற்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி முத்துப்பேட்டையில்லுள்ள பிரிலியண்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் 28 Jan 2016 அன்று 10மற்றும்12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திருவாரூர் முன்னால் மாவட்ட தலைவர் வழகறிஞர் தோழர் முகமது பைசல் அவர்கள் தலைமை தாங்கினார், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினறும் , முன்னால் பள்ளி மாணவருமான தோழர் மர்சூக் அகமது கலந்து கொண்டார். இவ்வகுப்பினை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில குழு உறுப்பினரும் ஆக்சஸ் இந்தியாவின் பயிர்ச்சியாளருமான தோழர் வழக்கறிஞர் முகமது தம்பி சிறப்பாக நடத்தினார். இதில் சுமார் 120 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.









0 comments :

Post a Comment