இப்படிக்கு நட்பு...

நட்பு

என்பது கானல் நீராகி

நினைவுகள் மட்டுமே

நிரந்தர கனவாகி

வாழ்க்கை

எனும் காலச்சக்கரத்தில்

விடை

தெரியாத எதிர்காலத்திர்காக

கையிலிருக்கும்

நிகழ்காலத்தையும்

கடந்தகால

நட்பையும் பறிகொடுத்துவிட்டு

ஆன்லைனி

-ல் பார்த்தாலும்

ஒரு

ஹாய் கூட சொல்லமுடியாத

ஒரு

மெயில் கூட பண்ணமுடியாத

பெருந்தன்மையான

தருணத்தில்

கடந்து

போன பசுமையான நினைவுகளை

ஒரு

நிமிடம் நினைத்து பார்த்து

இந்த

இயந்திர உலகத்தில் - நீயும்

இயந்திரமாகி

போகாமல்

என்றும்

மனிதனாக

மறக்காத

நினைவுகளுடன்

என்றும்

நல்ல நண்பணாக

உன்னுடன்

படித்த, பழகிய,

நினைவில்

நிற்கும் நண்பணுக்கு

ஒரு

மெயில் அனுப்பு.

இப்படிக்கு நட்பு

0 comments :

Post a Comment