Labels:

ஜாவீத் ஆளம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பீகார் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்



பீஹார் மாநிலம் பாட்நாவில் நடைபெற்ற முதல் பிரதிநிதிகள் மாநாட்டில் திரு.ஜாவீத் ஆளம் அவர்கள் பீஹார் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் பீகார் மாநிலம் முழுவதிலும் இருந்து பிரதிநிகள் கலந்துகொண்டனர். 



திரு.ஆளம்கிர் அவர்கள் மாநில துணைத்தலைவராகவும், திரு.மோபஷிர் நவாஸ் அவர்கள் மாநில பொதுச் செயலாளராகவும், திரு.தவசிப் அவர்கள் மாநில செயலாளராகவும், அசார் ஆளம் மாநில பொருளாளராகவும், ரக்க்ஷர் பர்வீன் மற்றும் ஷகிர் மாநில குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் திரு.அநீசுஜ் ஜமான் அவர்கள் கலந்துகொண்டார். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் திரு.மேகஃபுஸ் அசன் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். துவக்க உரையில் திரு.மேகஃபுஸ் அசன் அவர்கள் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியவின் இலக்கு மற்றும் நோக்கங்களை பற்றி வீரியமாக நிகழ்த்திய உரை மாணவர்கள் பலரை ஊக்கப்படுத்தும் விதத்தில் அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் உரைநிகழ்த்திய பீகார் மாநில SDPI ஒருங்கிணைப்பாளர் திரு.அஃப்தாப் ஆளம் அவர்கள் மாணவர்கள் அரசியலில் அதிக ஆர்வம் காட்டவேண்டும் என கூறினார். முகம்மது ஜவ்ஹர் (Positive Thing Forum), அப்துல்லாஹ் மற்றும்  பொறியாளர் ஹசீப் ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.
   
தேசியத் தலைவர் அநீசுஸ் ஜமால் அவர்கள் கூறுகையில் "மாணாவர்கள் தங்களது சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை கையிலெடுத்து அதற்க்கான சரியான தீர்வுகளை கண்டறிய வேண்டும், இன்றைய மாணவர்கள் தான் எதிர்கால இந்தியாவின் பிரதிநிதிகள்"  

0 comments :

Post a Comment