Labels:

நவீன காலனியாதிக்கம் மற்றும் சியோனிசத்தின் தாக்கத்தில் இருந்து இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்போம் !!தேசிய அளவிலான பிரச்சாரம்
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


பூரண சுதந்திரம் என்பது நம் இந்திய சுதந்திர போராட்டங்களின் ஒட்டுமொத்த குறிக்கோளாக இருந்தது. நமது முன்னோர்கள் ஆயிரக்கணக்கில் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்து அடிமைத்தனம் இல்லாத சுதந்திர இந்தியா எனும் கனவு தேசத்தை உருவாக்கினர், ஆனால் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை விரட்டியடித்தது மட்டும்தான் சுதந்திரமா? நிச்சயமாக பூரண சுதந்திரம் என்பது இந்தியாவின் தனிப்பட்ட அடையாளத்தை உலக நாடுகள் முன் நிலைநிறுத்தி நமது நாட்டின் கொள்கை முடிவுகளை நாமே எடுப்பதாகும். இத்தகைய பூரண சுதந்திரம் என்ற கொள்கையின் வலிமையை உணர்ந்ததால்தான், நம் நாட்டை கட்டமைத்த நமது முன்னோர்கள் "இறையாண்மை" என்பதை தேசத்தின் அரசியல் நிர்ணய சட்டமாக வகுத்தனர்.
இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்காவும் , சோவியத் யூனியனும் உலகின் தலைமையை அடைய பல புதிய நாடுகளை பளிகடவாக்கினர், பல ஐரோப்பிய நாடுகள் தங்களின் இறையாண்மையை இழந்து அமேரிக்கா அல்லது சோவியத் ரஷ்யாவின் அடிமைகளாய் மாறின. கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவத்தால் ஏற்ப்பட்ட இந்த துன்பியல் நாடகம் ஜெர்மனி,ஹங்கேரி , கொரியா, வியட்னாம், லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆஃப்கானிஸ்தான் என தொடர்ந்ததது . இப்படிப்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில்தான் இந்தியா அணிசேராக்கொள்கையை முன்னிலைப்படுத்தி அதனை செயல்முறைப்படுத்தியது. இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான ஒரு பலமான அடித்தலமாக இந்த அணிசேராக்கொள்கை அமைந்தது. இந்தியாவின் துனிகராமான இந்த முடிவினால் உலக அளவில் வளர்ந்துவரும் நாடுகளுக்கிடையே நம் நாடு தனித்துவமும், பலம் மிக்க நாடாகவும் உருவானது.


ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தியா தன்னுடைய இறையாண்மையை இழந்து அணிசேராக்கொள்கையிலிருந்து விலகிச்சென்று கொண்டிருக்கிறது. இந்நிலை நீடித்தால் நம் நாடு மீண்டும் ஒரு நவீன காலணியாதிக்க சக்தியின் கீழ் அடிமைப்பட்டு கிடக்கும் நிலைமை உருவாகும். 1990-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்தியா அறிமுகப்படுத்திய புதிய பொருளாதார கொள்கைகளின் மூலம் தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் போன்ற மக்கள் விரோத கொள்கைகளுக்கு நம் நாட்டின் கதவுகள் திறந்துவிடப்பட்டது. காலனியாதிக்க சக்திகளின் நவீன படைப்பிரிவுகளான கார்பரேட் கம்பெனிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளான IMF, உலக வங்கி போன்றவற்றிடம் நம் நாட்டின் தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுபோன்ற நிலைகள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இயல்புதான் என்றாலும் இதன் பின்னால் உள்ள அரசியல் சூழ்சிகள் வெகுசீக்கிரத்திலேயே வெளிப்படும். இப்படியாக அதிகரித்துவரும் தேவைகள் நம் நாட்டின் இறையாண்மையில் மேலை நாடுகள் தலையிடும் சூழ்நிலையை உருவாக்கும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் சியோனிச இஸ்ரேலுடனான இந்தியாவின் நட்ப்புறவு. நமது நாட்டின் தீர்மானங்களில் அந்நிய நாடுகளின் தலையீடு இருப்பற்கான சூல்நிலைகளுக்கு இது ஒரு ஆரம்பம் மட்டுமே.வளர்ந்து வரும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலுடனான நட்புறவின் விளைவு உலக நாடுகள் மீதான இந்தியாவின் நிலைப்பாட்டில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் உரிமைக்காக போராடுபவர்களும், சியோனிச கொள்கைகளுக்கு ஏதிராக போராடுபவர்களும் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தம், அரபு நாடுகலுடனான இந்தியாவின் பாரம்பரிய நட்புறவிற்கு கலங்கம்விலைவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த “ஏரியல் ஷெரோன்” போன்ற குற்றவாளிகளுக்கு சிவப்புக்கம்பள வரவேற்ப்பு அளிப்பதன் மூலம் இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளை உருவாக்கிய நமது நாட்டின் தலைவர்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள். அமெரிக்காவின் தூண்டுதலால் ஐநாவில் ஈரானுக்கெதிராக வாக்களித்ததன் மூலம் இந்தியா-ஈரான் இடையேயான நீண்டகால நட்புறவு சிதைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பிற்குப்பின்  ஈரான் உடனான தொடர்பை துண்டித்துக்கொள்ள இந்தியாவை எவ்வாறு இஸ்ரேல் நிர்பந்தித்தது என்பதை அனைவரும் நன்கறிவோம். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக  மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திலிருந்து யூத சியோனிசத்திற்க்கேதிராக எதிராக போராடும் மக்களின் பாதுகாப்பு கேல்விக்குறியாகியுள்ளது என்பதை நாம் தெளிவாக உணர முடிகிறது. காலணியாதிக்க மற்றும் சியோனிச படைகளுக்கு சாதகமாக புதிய சட்டங்களை நிறைவேற்றக் கூட ஆளும் மத்திய அரசு தயங்காது.

இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் தலையாய கடமையாகும் ஆனால் துர்திஷ்டவசமாக நமது நாட்டின் இறையாண்மையின் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு எதிராக எந்த ஒரு குடிமகனும் தனது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை, அதிலும் மாணவர்களில் பெரும்பகுதியினர் இதை பற்றிய விழிபுணர்வு இல்லாமல் இருக்கின்றனர். மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இன்றய கல்வி முறை அந்நிய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்மாதிரியாக வைத்து செய்யல்படுகின்றது. நாட்டில் உள்ள பணமுதலைகலும் அவர்களின் கைக்கூலிகளும் மாணவர்களின் முன்மாதிரியாக காட்டப்படுகின்றனர். இப்படிப்பட்ட ஒரு கல்வியைகற்கும் மாணவர்களிடமிருந்து நாம் எப்படிப்பட்ட விழிப்புணர்ச்சியை எதிர்பார்க்க இயலும்.


இதனை பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவே கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இந்திய இறையாண்மையை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை  முந்நிலைப்படுத்தி தேசிய அளாவிலான ஒரு விழிப்புணார்வு பிரச்சாரத்தை செய்து வருகின்றது. பலவகை நிகழ்ச்சிகளை அனைத்து கல்லூரிகளிலும் நடத்த உள்ளோம். இந்தியாவிற்கு  காலணியாதிக்க மற்றும் சியொனிச சக்திகளினால் ஏற்ப்படவிருக்கும் ஆபத்தினை மாணவர்களின் முன் கொண்டுவந்து, இந்திய இறையாண்மையை பாதுகாக்க அவர்களை முன் நிறுத்துவதே இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலாதிக்க சக்திகளுக்கு எதிராக நடக்கும் இந்த போராட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் ஒரணியில் திரல்வோம் இந்திய இறையாண்மை பாதுகாப்போம்!!

இவண்
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு
     


0 comments :

Post a Comment