Labels:

கல்லூரி நுழைவாயில் முன்பு ஆர்பாட்டம்









சிறுவன் தமிம்அன்சாரி சுடப்பட்ட சம்பவத்தை கண்டித்து கல்லூரி நுழைவாயில் முன்பு ஆர்பாட்டம்

சென்னை நீலாங்கரை அருகே வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் ஹனிபா. இவரது மனைவி சபீனாபேகம். இவர்களுக்கு தமீம் அன்சாரி (15) உள்ளிட்ட மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
ஹனிபா சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதனால் சபீனாபேகம் அப்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறார்.
ஒரு திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட சிறுவன் தமீம் அன்சாரியிடம்,நீலாங்கரை காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் துப்பாக்கியை காட்டி பயமுறுத்தி விசாரணை நடத்தியபோது, துப்பாக்கி வெடித்து, தமீம் அன்சாரியின் கழுத்தில் குண்டு பாய்ந்து தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் .போலீஸ் ஆய்வாளரின் இத்தகைய அராஜக செயலை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் உள்ள முஹம்மத் சதக் கலைகல்லூரி கிளையின் சார்பாக கல்லூரி நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு கேம்பஸ் ஃப்ரண்டின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தோழர் முஸ்தபா அவர்கள் தலைமை ஏற்று கண்டன உரை ஆற்றினார்.
தீர்மானங்கள்:
1.அராஜக செயலில் ஈடுபட்ட ஆய்வாளர் புஷ்பராஜை பணிநீக்கம் செய்யவேண்டும்
2.அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த ஆய்வாளர் புஷ்பராஜிற்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.
3.பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அரசின் மூலம் உயர்சிகிச்சை அளித்து 20 லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும்.

0 comments :

Post a Comment