Labels:

நிறுவன படுகொலைக்கு எதிரான போராட்டம்

நெல்லை தென்காசியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம். 
*************************************************
ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்தில் முனைவர் இரண்டாமாண்டு பயின்று வந்த தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துள்ளார். இது நிறுவனப் படுகொலை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நீதி விசாரணை கோரியும் ,இந்த உயிரிழப்பிற்கு காரணமான கொடியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியும் தேசம் முழுவதும் போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக தென்காசி BSNL அலுவலகம் முன்பு (20.01.16) மாலை 4.00 மணியளவில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இதற்கு கேம்ப்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார் , சிறப்பு அழைப்பாளராக தோழர் ரவூப் அவர்கள் உரையாற்றினார், மாவட்ட செயலாளர் அசார் நன்றியுரை ஆற்றினார்.




0 comments :

Post a Comment