Labels:

47 மில்லியன் வழிகாட்டி புத்தகங்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம்.




புத்தகங்களை இணையத்தில் தேடுவது எளிதான காரியம் என்றாலும்
இங்கே ஒன்றல்ல இரண்டல்ல 47 மில்லியன் புத்தகங்களை ஒரே
இடத்தில் இருந்து தேடலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
 
எந்த புத்தகம் வேண்டும் , புத்தகத்தைப்பற்றிய எந்த விபரம் உங்களுக்குத்
தெரியும் இது மட்டும் போதும் இனி அந்த புத்தகம் சில நிமிடங்களில்
உங்கள் கையில் சற்றே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. காலத்தின்
வேகமான மாற்றம் தான் இந்தத் தளத்திற்குச் சென்று நாம் எளிதாகத்
தேடலாம்.
இணையதள முகவரி : http://theguidedb.com
 
தேடவேண்டிய புத்தகத்தின் பெயரை மட்டும் கொடுத்து Search என்ற
பொத்தானை அழுத்தினால் மட்டும் போதும் உடனடியாக நமக்கு
இலட்சக்கணக்கான புத்தகங்களை கொட்டிக் கொடுக்கிறது. 
தமிழில் டைப் செய்து அப்புத்தகத்தின் பெயரை பேஸ்ட் செய்தால் தமிழ் புத்தகமும் கிடைக்கும்.மற்ற தளங்களை விட இந்தத் தளத்தில் இருந்து கொண்டே வேறு எந்தத்
தளத்திற்கும் செல்லாமல் நேரடியாக புத்தகங்களை தரவிரக்கலாம்.
உதாரணமாக நாம் Java என்பதை கொடுத்து தேடினோம். வரும்
முடிவை படம் -2ல் காட்டியுள்ளோம். இதிலிருக்கும் Download என்ற
பொத்தானை அழுத்தி நாம் நேரடியாக தரவிரக்கலாம். கண்டிப்பாக
இந்தத் தளம் மாணவர்கள் , ஆசிரியர்கள் என அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.

0 comments :

Post a Comment