Labels:

பாஸ்வேட் ரெகவரி.....

இன்டர்நெட் பயன்பாட்டில், ஈமெயில் பாஸ்வேட் சிலருக்கு அடிக்கடி மறந்து போகும்; அவர்களுக்கு உதவியாக (ப்ரொவ்சிங் சென்டர் நிர்வாகிக்கும்தான்) "பாஸ்வேட் ரெகவரி" மென்பொருள் உள்ளது
(மொசில்லா ப்ரௌசெரில் மட்டும்)...
இது அந்த சிஸ்டத்தில்  யூசர்நேம்,பாஸ்வேட் எந்தெந்த தளத்தில் என்னென்ன பதிவு செய்தோம் என்பதை வெளிக்கொணர்ந்துவிடும்.
ஆன்லைனில் பணவர்த்தனை செய்பவர்கள் உங்கள் வங்கி கொடுத்துள்ள ஆன்லைன் விசைபலகையை பயன்படுத்துங்கள். மிகவும் பாதுகாப்பானது.




பாஸ்வேட் ரெகவரி
இன்னும் பல தொடர்புடைய  பயன்பாட்டு மென்பொருள் 
Other Applications software



நீங்கள் நீக்கிய ( Deleted ) கோப்புகளை திரும்ப பெற ஒரு இலவச கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருள்.
மென்பொருள் தரவிறக்க சுட்டி  இந்த மென்பொருள் விண்டோஸ் 2000 முதல் விண்டோஸ் 7 வரை அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கும்.





உங்களிடம் உள்ள எந்த ஒரு வீடியோ ஆடியோ புகைப்படம் போன்றவற்றை உங்களுக்கு பிடித்த கோப்பாக மாற்ற 
பல்வேறு மென்பொருள் பயன்படுத்த வேண்டும் இவையனைத்தும் ஒரு ஒரு இலவச மென்பொருளில் செய்தால் எப்படியிருக்கும். இதுதன் அந்த இலவச மென்பொருள் பெயர் அடாப்டர் சுட்டி இந்த மென்பொருள் விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்குகளில் இயங்கும் வகையில் வடிவைமைக்கப்பட்டிருக்கிறது.


உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸில் இருக்கும் பொழுது மேலே Web Clip என்று விளம்பரங்கள் வரும் இந்த இடத்தில் விளம்பரத்திற்கு பதில் உங்களுக்கு பிடித்த வலைப்பதிவர்களின் முகவரி கொடுத்தால் அவர்கள் கடைசியாக எழுதிய பதிவின் தலைப்பு உங்களுக்கு செய்தியாக தரும் 
அதை எப்படி மாற்றுவது ???

முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து வலது புறம் மேலே Settings என்பதனை தேர்வு செய்யுங்கள்.

அதனுள் Web Clips என்பதனை தேர்வு செய்யுங்கள்.

இதில் நிறைய தளங்கள் இணைத்திருப்பார்கள் உங்களுக்கு தேவையில்லாத தளங்களை எடுத்து விடுங்கள்

பிறகு உங்களுக்கு பிடித்த தளங்களின் முகவரியை உள்ளீடுங்கள் இனி உங்கள் இன்பாக்ஸில் உங்களுக்கு பிடித்த தளங்களின் பதிவின் தலைப்புகள் இன்பாக்ஸின் மேலே.

>> டாக்ஸி

  உங்களுக்கு பிடித்த காட்சியை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளவும்  அல்லது அதை வீடியோ படமாக எடுத்து வைத்துக் கொள்ளவும் இந்த மென்பொருள் உதவும்.  இந்த மென்பொருள் திறந்தநிலை கட்டற்ற மென்பொருளாகும்.  மென்பொருளின் பெயர் டாக்ஸி 



மென்பொருள் தரவிறக்க சுட்டி

டேட்டா டிவிடிக்கள் எழுத
அனைவரும் அதிகமாக உபயோகப்படுத்துவது நீரோ என்னும் மென்பொருளாகும்.   இந்நிறுவனத்தினர் இப்பொழுது நீரோ லைட் 10 என்ற மென்பொருளை இலவசமாக தருகின்றனர் இதன் மூலம் CD-R, CD-RW, DVD±R, DVD±RW, DVD-RAM, DVD±R DL போன்ற வன்தட்டுகளில் எழுதலாம்.  நீரோ லைட் தரவிறக்க இங்கே செல்லுங்கள்.   மென்பொருள் சுட்டி



உங்கள் கணினியில் உள்ள முக்கிய போல்டர்களை லாக் செய்ய அத்துடன் உங்கள் கணினியில் யாரும் பென் ட்ரைவ் உபயோகிக்காத வண்ணம் தடுக்க இரண்டிற்கு சேர்த்து ஒரு மென்பொருள் பட்டூலாக்.

இது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆதரிக்கிறது.  மென்பொருள் தரவிறக்க சுட்டி



இலவச ஆல் இன் ஒன் மென்பொருள் மற்றும் லைசென்ஸ் கீகள் மீட்டெடுக்க மென்பொருள்

 
நண்பர்களே உங்கள் கணினியில் எந்த மென்பொருள் நிறுவி இருந்தாலும் அதற்கு நீங்கள் உரிமம் வாங்கி நிறுவி இருப்பீர்கள் சில நேரம் அந்த உரிம எண் உங்களிடம் தொலைந்து போயிருக்கலாம். ஆனால் அந்த மென்பொருள் அப்படியே உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால் அந்த நிறுவப்பட்ட மென்பொருளிலிருந்து அந்த மென்பொருளுக்கான உரிம எண் தேடி எடுக்கலாம்.  அதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கிறது.  மென்பொருள் சுட்டி 



இசை டிஜேக்களுக்கான ( DJ - Disc Jockey) மென்பொருள் மிகவும் விலை அதிகம் ஆனால் இலவசமாக அனைவரும் உபயோகப்படுத்தும் வகையில் சுலபமாக இருக்கிறது இந்த மென்பொருள்.  அதுவும் இந்த மென்பொருள் ஒரு கட்டற்ற மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு.  மென்பொருளின் பெயர் மிக்ஸ் என்பதாகும்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


இலவச வீடியோ கன்வெர்டர் வகையில் இதுவும் வருகிறது. மென்பொருள் பெயர் FreeMake Video Converter ஆனால் இந்த மென்பொருள் செய்யும் செயல்கள் அதிகம்.   மிகவும் நிறைய வகையான கோப்புகளை ஆதரிக்கிறது.  மென்பொருளில் இருந்து நேரடியாக யூட்யூபில் பப்ளிஷ் செய்யலாம்.  டிவிடி சிடி எரிக்கலாம்.  போட்டோ ஸ்லைடு ஷோ செய்யலாம்.  வீடியோ எடிட்டிங் செய்யலாம்.  மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பு வகைகளை தெரிந்து கொள்ள சுட்டி


இந்நிறுவனத்தின் இன்னும் ஒரு தயாரிப்பு FreeMake Video Downloader  இந்த மென்பொருள் வீடியோ தளங்களிலிருந்து படங்களை தரவிறக்க உதவுகிறது.  மென்பொருள் தரவிறக்க சுட்டி


இந்த இரண்டு மென்பொருளையும் சேர்த்து தரவிறக்க விரும்புவர்களுக்காக FreeMake Suite என்று வெளியிடப்படுகிறது.  தரவிறக்க சுட்டி

தகவல்: சில இணையதளங்கள் 

0 comments :

Post a Comment