பொறியியல் கல்லூரிகளில், நன்கொடை வசூலித்தாலோ, கூடுதல் கல்விக் கட்டணம் வசூலித்தாலோ புகார் செய்ய தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப கல்வி மன்ற துணைத் தலைவர் எம்.எஸ்.பழனிச்சாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார்ஜெயந்த் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்க்க, நீதிபதி பாலசுப்பிரமணியம் கமிட்டி, ஆண்டு ஒன்றுக்கு ரூ. 32, 500 என்றும், தரச்சான்று பெற்றப் பாடப்பிரிவுகளுக்கு ரூ.40ஆயிரம் என்றும் நிர்ணயித்தது. மேலும், அரசு ஒதுக்கீட்டில் சேராமல் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்பவர்களுக்கு 62,500 என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் கட்டணம் 2010-2011 ஆம் ஆண்டுக்கு பொருந்தும் என்று அரசு அறிவித்தது.
இந்தக் கட்டணங்களுக்கு மேல் அதிகமாக கட்டணம் வசூலித்தாலோ அல்லது நன்கொடை வசூலித்தாலோ, எம்.எஸ்.பழனிச்சாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புகார் குழுவுக்கு, 044-22353755 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். இது தவிர, அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழக பதிவாளர்கள் ஆகியோரிடமும் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினகரன்
0 comments :
Post a Comment