Labels:

சிவில் சர்வீசஸ் முக்கிய தேர்வு தொடங்கியது

ந்திய குடிமைப்பணி தேர்வான சிவில் சர்வீசஸ் முக்கிய தேர்வு இம்மாதம் 29-ம் தேதி முதல், நாடெங்கிலும் உள்ள 19 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.

இதற்கான அனுமதிச் சீட்டுகளை மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் அனைத்து தகுதியுள்ள தேர்வர்களுக்கும் அனுப்பியுள்ளது. ஏதேனும் காரணத்திற்காக அனுமதி மறுக்கப்பட்டிருந்தால் அதை குறிப்பிட்டு கடிதங்களையும் ஆணையம் அனுப்பியுள்ளது.
அனுமதிச் சீட்டையே, அனுமதி மறுப்பு கடிதத்தையோ கிடைக்கப் பெறாத தேர்வர்கள் உடனடியாக தில்லியில் உள்ள மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தை நேரிலோ, 011-2338 1125, 2309 8543 தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ள வேண்டும். ஆணையத்தின் தொலைநகல் எண் 011-2338 7310.
இத்தேர்வு தொடர்பான அனைத்து தகவல்களும் ஆணையத்தின் இணையதளமான www.upsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளன. அனுமதிச் சீட்டுகள் கிடைக்கப் பெறாத தகுதியுள்ள தேர்வர்கள், இந்த இணையதளத்தில் இருந்து தேர்வு மையம் தொடர்பான தகவலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட தாளுடன், தேர்வுக்கு செல்லும் போது இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு புகைப்படத்தில் கெசடட் அலுவரின் சான்றொப்பம் இருக்க வேண்டும். இல்லாவிடில் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டாது. இத்தகைய தேர்வர்கள் தமது அடையாளத்திற்கு சான்றாக அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
Source: Vikatan.com

1 comments :

Post a Comment