Labels:

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆதரவு




குமரி மாவட்டம், கோட்டார் அரசு ஆயுர்வேத கல்லூரியில் 2011-2012 ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தமிழக அரசால் கலந்தாய்வு நடத்தப்பட்டு 48 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். மருத்துவ கல்லூரி மத்திய மருத்துவ குழுவால் ஆய்வு செய்யப்பட்டு போதிய அடிப்படை வசதியும் பேராசிரியர்களும் இல்லையன கூறி, 2011 -2012 ஆண்டிற்கான மாணவ சேர்க்கைக்கு அனுமதி மறுத்தது. மத்திய மருத்துவ குழு போதிய வசதிய ஏற்ப்படுத்துமாறு மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால் மாணவர்கள் தங்களை வகுப்பிற்குள் அனுமதிக்க வேண்டும் என கேட்டு கடந்த 15 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து 05/3/12 அன்று குமரி மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆட் இந்தியா சார்பாக மாவட்ட மாலிக் முஹமது அவர்கள் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மருத்துவ கல்லூரி முதல்வரை சந்தித்து மாணவ மாணவிகளுக்கு தேவையான உதவியை செய்ய வலியுறுத்தப்பட்டது.



குமரி மாவட்டம், கோட்டார் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி தமிழகத்திலேயே இயங்கிவரும் ஒரே ஒரு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியாகும். ஆயுர்வேத மருத்துவ கல்லூரியானது 2009-2010 கல்வியாண்டில் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 93 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே 2011-2012 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு மூலம், அக்டோபர் 21, 2011 சென்னையில் வைத்து நட்த்தப்பட்டு 44 மாணவிகள், 4 மாணவர்கள் உட்பட 48 மாணவர்கள் மருத்துவ கல்லூரியின் முதலாமாண்டிற்கு மானவர்காளாக சேர்க்கப்பட்டனர். கடந்த அக்டோபர் 28 ம் நாள் மாணவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்களை மருத்துவ கல்லூரியில் சமர்பிக்க வலியுறுத்தப்பட்டனர். இதனிடையே பல்வேரு கல்லூரியில் பயின்று கொண்டிருந்து, கலந்தாய்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மாணவர்கள் அவர்கள் பயின்று கொண்டிருந்த கல்வியை இடைநிறுத்தம் செய்து, ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் சேர்ந்தனர். மாணவர்களுக்கு கல்லூரி திறக்கும் நாள் பின்னர் அரிவிக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டு 3 மாதம் கழித்தும் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படாத்தால் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே மார்ச் 2011 அன்று ஆயுர்வேத கல்லூரியை ஆய்வு செய்ய வந்த அனைத்து இந்திய மருத்துவ கழகக் குழு, 2011-2012 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்த மருத்துவ கல்லூரிக்கு போதுமான அடிப்படை வசதியில்லை எனவும் போதிய பேராசிரியர்கள் இல்லை எனவும் கூறி அனுமதி மறுத்தது. மேலும் போதுமான இடவசதியையும், அடிப்படை வசதியையும் ஏர்ப்படுத்தவும் தகுதி வாய்ந்த பேராசிரியர்களையும் நியமிக்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது.
மருத்துவ கல்லூரிக்கு உண்டான தகுதியாக மத்திய மருத்துவக் குழு பரிந்துரைத்த பரிந்துரைகளை நடைமுரைப் படுத்துவதில் மாநில அரசு காட்டிவரும் மெத்தனம்போக்கும், மாநில, மத்திய அரசுக்கு இடையே நடந்து கொண்டிருக்கும் மோதல் போக்கும் அநியாயமாக 48 மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடி கொண்டிருக்கிறது.
ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக குமரி மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாவட்ட தலைவர் மாலிக் முஹமது தலைமையில் மாணவர்களை சந்தித்து கேம்பஸ் ஃப்ரண்டின் செயற்குழுவில் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தெரிவித்து அவர்களுடன் போரட்டத்தில் ஈடுபட்டது.

போராட்டத்தின் இறுதியாக பல்வேறு கோரிக்கைகள் கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில மத்திய அரசுக்கு வைக்கப்பட்டது.

1.
மத்திய மருத்துவ குழு மாநில அரசுக்கு பரிந்துரைத்த பரிந்துரைகளான மருத்துவ கல்லூரியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவேண்டும், போதிய பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.
2.
மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் மோதல் போக்கை கைவிட்டு முறையாக முதலாமாண்டு வகுப்பை உடனே ஆரம்பிக்க வேண்டும்.
3.
ஆயுர்வேத மருத்துவ கல்லூரிக்கான மூலிகை பண்ணையை முறையாக துவக்கி பராமரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 comments :

Post a Comment