Labels:

இம்சை இணையதளம்





உலகம் உள்ளங்கையில்இணையதள பயன்பாடு நடைமுறைக்கு வந்த பின் பரவலாக உபயோகிக்கப்படும் சொற்பிரயோகம் இது. நவயுக வளர்ச்சியில் இணையத்தின் பங்களிப்பு மிகுதியானது என்பதை மறுப்பதற்கியலாது. நட்பு வட்டாரங்களும், உறவுகளும் பிரிந்து வெகு தூரம் சென்ற நிலையில், இணையத்தின் சமூக வலை தளங்கள சோசியல் நெட்வொர்க்ஸ்”, உறவுகளை சேர்க்கும் முக்கிய காரணியாய் திகழ்கின்றன.

அனைத்து அறிவியல் வளர்ச்சிகளிலும், ஆக்கமும் அழிவும் ஒருங்கே இருந்தாலும் அழிவின் பக்கமே மனம் ஈர்க்கப்படுவது நிதர்சனம். பெரும்பாலான ஐ.டி தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரையும் ஆட்கொண்டு அடிமையாக்கிய சமூக வலைதளங்கள், நாம் உணராத நிலையில் நம் ஆயுளை  கபளீகரம் செய்கிறது.

தனது பெரும்பகுதி நேரத்தை வீணடிக்கும் வேளையில், மக்களை நோகடிக்கவும் சில குறுபுத்தியாளர்கள் முயல்வது வேதனைக்குரியது. உலகின் பெரும்பான்மை மக்கள் மதிக்கும்

மாமனிதர்கள்”, “சீர்திருத்தவாதிகள்”, சமூக அந்தஸ்துள்ள தலைவர்கள் குறித்த நாகரீகமற்ற கருத்துகளையும், விவாதங்களையும், கேலிச்சித்திரங்களையும் பதிவு செய்து மகிழும் ஈனப்பிறவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் .
   இது போன்ற பதிவுகளுக்கு தணிக்கை வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவி சாய்க்காத மனித வள மேம்பாட்டுத்துறை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்த நாகரீகமற்ற விமர்சனங்களுக்குப் பின்னால், “இணையதள கட்டுப்பாட்டிற்குமுயன்றதும், ’நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும்போது தணிக்கை சாத்தியமில்லைஎன வலைதளங்கள் மறுத்ததும் தற்போதைய நிகழ்வுகள்.

இது போன்ற பதிவுகள் நிகழும்போது, நூறு பயனீட்டார்கள் அப்யூஸ்என தெரிவித்தால், அப்பதிவு தானாக நீக்கப்பட்டு தணிக்கைக்கு அனுப்பப்பட வேண்டும். தணிக்கையில் உறுதிசெய்யப்பட்டால், பதிவு செய்தவருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்படுவதும் மூன்று முறையாக தொடர்ந்தால் பயனீட்டு கணக்கு நீக்கப்படவும் வேண்டும். மேலும் அப்பயனீட்டாளரின் தகவல்களைக் கொண்டு, மீண்டும் வேறு கணக்கை தொடங்குவதற்கும் தடை விதிக்க வேண்டும்.

தணிக்கையில் உறுதி செய்யப்படாவிடில்,பதிவு தொடர்வதோடு, “அப்யூஸ்என தெரிவித்திருந்த  பயனீட்டார்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்புவதும், தொடர்ந்து தவறான அப்யூஸ்”  தெரிவிக்கும் பயனீட்டாளர்கள் லாக்-இன் செய்தால் அப்யூஸ்-லிங்க் செயலிழந்து காணப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இது போன்ற சாத்தியமுள்ள தணிக்கைகளை, சமூக வலைதளங்கள் மேற்கொள்ள அரசு நிர்பந்திக்குமா?

:-ஷாபி 


0 comments :

Post a Comment