Labels:

பள்ளி செய்த அநீதிக்கு நீதி வழங்கிய ஐகோர்ட்


மதுரை: தேர்ச்சி விகிதம் குறைந்துவிடும் எனக் கருதி, சிவகங்கை மாவட்டம், செயின்ட் யுஜின் உயர்நிலைப் பள்ளி மாணவருக்கு, பத்தாம் வகுப்பு தேர்வு எழுத, ஹால் டிக்கெட் மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கலான வழக்கில், மாணவரை தேர்வு எழுத அனுமதிக்குமாறு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

அனுமதி மறுப்பு
இளையான்குடி அருகே, வழக்காணியை சேர்ந்த மாணவனின் தாய் ராஜகுமாரி தாக்கல் செய்த மனு: நாங்கள் படிப்பறிவு இல்லாத தினக்கூலிகள். மகன் கற்பகபாண்டித்துரை. இவர், சிவகங்கை மாவட்டம், கொம்பாடியில் உள்ள செயின்ட் யுஜின் உயர்நிலைப் பள்ளியில், 2007 முதல் படித்து வருகிறார். எந்த வகுப்பிலும் தோல்வியடையாமல், குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்று வந்துள்ளார்.

பத்தாம் வகுப்பு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில், சில பாடங்களில் குறைந்தபட்ச மதிப்பெண்ணை விட, குறைவாக வாங்கினார். என் மகனை பொதுத் தேர்வு எழுத அனுமதித்தால், பள்ளியில் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் என, தாளாளர் கருதினார்.
அவர், காரணமின்றி தேர்வுக் கட்டணத்தை வாங்க மறுத்தார்; ஹால் டிக்கெட்டும் வழங்கவில்லை. இது, அடிப்படைக் கல்வி உரிமையை மறுப்பதாகும். தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வை எனது மகன் அதே பள்ளியில் எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்வு எழுதலாம்
இம்மனு, நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் அருணாசலம், அரசு வழக்கறிஞர் பாரதி ஆஜராகினர். மதுரை மண்டல தேர்வுத்துறை துணை இயக்குனர், மாணவரிடம் தேர்வுக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். அரசு தேர்வுத்துறை இயக்குனர் ஹால் டிக்கெட் வழங்க வேண்டும். தாளாளர் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
dhinamalar

0 comments :

Post a Comment