Labels:

மாற்றுத் திறனாளி மாணவிக்கு ‘ஏகலைவா புரஸ்கார்-2013













கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ‘ஏகலைவா புரஸ்கார்-2013’ விருது வழங்கும் விழா சென்னையில் பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் மன்றத்தில் 24-11-2013 ஞாயிறன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் எஸ்.அப்துற்றஹ்மான் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த மாணவர்களில் கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாணவரை தேர்வு செய்து ‘ஏகலைவா புரஸ்கார் விருது’ வழங்கப்படுகிறது.
இவ்வருடத்திற்கான ‘ஏகலைவா புரஸ்கார்-2013’ விருதிற்கு சென்னையை சார்ந்த மாற்றுத் திறனாளி மாணவி பாத்திமா பானு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ‘ஏகலைவா புரஸ்கார்-2013’ விருது மற்றும் ரூபாய் ஐந்தாயிரம் ரொக்கப் பரிசினை தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவிக்கு வழங்கி கெளரவித்து சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஏ.எஸ்.இஸ்மாயில் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி அவர்களும் மாணவர்களின் அறிவு சார்ந்த சமூகம் சார்ந்த சிந்தனைகள் புணரமைப்பது குறித்து சிறப்புரையாற்றினர்.

இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
இந்த பத்திரிக்கை செய்தியை தங்களது ஊடகத்தில் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

0 comments :

Post a Comment