Labels:

மாணவி தௌவ்ஃபீக் சுல்தானவின் படு கொலைக்கு நீதி வேண்டி





“மாணவி தவ்பிக் சுல்தானா மரணம் சம்பந்தமான
விசாரணையை துரிதப்படுத்த கோரி”.கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

கடந்த 21-11-2013 வியாழன் அன்று மாலை 5- மணி அளவில் ஜங்கஷன் காதிகிராப்ட் அருகில் மாணவி தௌவ்ஃபீக் சுல்தானவின் படு கொலைக்கு நீதி வேண்டியும் CBCID விசாரனையை விரைவு படுத்த கோரியும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இக்கண்டண ஆர்பாட்ட்த்திற்க்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.முகமது அலி தலைமை தாங்கினார். இக் கண்டன ஆர்ப்பாட்டத்தினை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் சட்டக்கல்லூரி மாணவருமான ஷேக் நசுருதீன் தொகுத்து வழங்கினார். கண்டன ஆர்பாட்டத்தின் துவக்கமாக நீதிக்கான கோஷங்கள் எழுப்பப்பட்டு ஆர்பட்டம் துவக்கமானது.

ஆர்பட்டதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமீம் வரவேற்புரை ஆற்றினார்.அதன் பின்னர் கண்டன உரையாற்றிய மாவட்ட தலைவர் நிகழ்காலதில் மானவ சமூகத்தின் பாதுகாப்பு கேள்விகுறியாக்கப்பட்டுள்ளதையும் குறிப்பாக மாணவிகள் நிம்மதியாக கல்வி கற்க முடியாத சூழல் எற்பட்டுள்ளதையும் பதியு செய்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவி தௌவ்பிக் சுல்தானவின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் பேசியதோடு நாட்டின் தலை நகர் டெல்லி முதல் அனைத்து பகுதிகளுக்கும் இவ்வாறான பாலியல் கல்லச்சார சீரலிவு சம்பவங்கள் அதிகரிதுள்ளதையும் இம்மாதிரியான அனைத்து பிரச்சனைகளும் சரியான முறையில் தீர்க்கப்படாமல் மொழி, இன, மத மாச்சர்யங்கள் காட்டப்படுவதையும் சுட்டிகாட்டினார்.

உளவு துறைக்கு மாற்றப்பட்டுள்ள பள்ளி மாணவியான தௌபீக் சுல்தானவின் கொலை வழக்கில் தமிழக உளவு துறை விரைந்து நடவடிக்கை எடுத்து உரிய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில் முனைப்புடன் செயல்படவேண்டும் என வலியுறுத்தி பேசினார். இறுதியாக மாவட்ட செயலாளர் முகமது ரபீக நன்றியுரையாற்ற கூடி இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்பாடம் சரியாக மாலை 6-மணி அளவில் நிறைவு பெற்றது.

0 comments :

Post a Comment