கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவ உறுப்பினர் சேர்கை


நாம் அனைவரும் இந்த தேசத்தை விரும்புகிறோம். ஆனால் இந்த தேசத்தில் நடப்பவற்றுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவர்களாக அல்லது வெறுமனே ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்து வருகிறோம் .
o அனைத்து குடிமக்களுக்கும் தரமான கல்வியை கிடைக்க செய்வது அரசின் கடமை. ஆனால் இந்த கல்வி இன்று ஒரு மெகா வியாபாரமாகி விட்டது. எத்தனையோ கமிஷன்கள் நியமிக்கப்பட்டு பரிந்துரைகள் பல செய்யப்பட போதும் கல்வியில் கொள்ளை என்பது தொடர்ந்து நடந்துக்கொண்டுதான் இருக்கிறது .
o நமது நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் புரையோடிக்கிடக்கிறது .நிலக்கரி ஊழல் , 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், கர்நாடகா சுரங்கங்களில் நடந்த முறைகேடுகள் என ஒரு நீண்ட ஊழல் பட்டியல் இதில் பி.ஜே,பி., காங்கிரஸ் போன்ற எந்த கட்சியும் விதிவிலக்கல்ல .
o அனைத்து அத்தியவாசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. 5 வருடங்களுக்கு முன் ஒரு கிலோ அரிசி ரூ 20 க்கு கிடைத்தது . ஆனால் அதே அரிசியை இன்று ரூ.45 க்கு மேல் விற்கப்படுகிறது.
o சுதந்திரம் பெற்றதிலிருந்து நமது நாட்டில் 13000க்கும் மேற்பட்ட மதக் கலவரங்கள் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்டுள்ளது. இந்த மதவாதம் இன்று கல்லூரி வளாகங்களில் மாணவர் அமைப்பு என்ற போர்வையில் புற்று நோயாக வளர்ந்து வருகிறது.
இன்னும் பல பிரச்சினைகள்
நாளைய தேசத்தினை ஆளப்போவது மாணவ சமூகமாகிய நாம்தான். வருங்கால நமது தேசத்தை கட்டமைப்பதில் மாணவர் சமூகமாகிய நாம் நிச்சயம் ஏதாவது ஒரு வகையில் பங்காற்ற இருக்கிறோம் . இந்த நிலையில் இதுபோன்ற பிரச்சினைகளில் நமது நிலைப்பாடு என்ன? நாம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு எதிராக ஒன்றுமே செய்திட சாத்தியமில்லை என்று விரக்தியான முடிவை எடுக்கப்போகிறோமா? அல்லது நமது சொந்த வாழ்கையை தவிர வேறு எதை பற்றியும் கவலை படக் கூடாது என்ற சுயநல நிலைபாட்டை எடுக்கப்போகிறோமா? தேசத்தினை நேசிக்கும் எவரும் இதுபோன்ற பிரசினைகளிலிருந்து பாராமுகமாக இருக்க மாட்டார்கள்.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் மாணவர்களுக்கு எதிரான பிரச்சினைகள் மற்றும் தேசவிரோத கொள்கைகளுக்கு எதிராக ஜனநாயக வழியில் நின்று போராடி வருகிறது. இத்தகைய தீமைகளை நமது நாட்டை விட்டே துரத்திட வேண்டும் என்று உறுதி பூண்டு , நாட்டின் பல மாநிலங்களில் பல நூற்றுக்கணக்கான கல்லூரி வளாகங்களில் செயல்படும் மாணவர் பேரியக்கமே கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.இந்த மாணவர் பேரியக்கத்தில் மாணவ சமூகமே இணைத்திடுவீர்! தேசத்தை பாதுகாப்பீர்!

உறுப்பினர் சேர்கை ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் செப்டம்பர் 20-ம் தேதி வரை

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
3/5 2-வது மாடி, சுல்தான் தெரு , மண்ணடி , சென்னை-1
தொடர்புக்கு: 9677072050, 7871786552

0 comments :

Post a Comment