“மாணவனே எழுந்திடு..! மாற்றத்திற்க்கு வித்திடு..!!


கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயல்திட்டத்தின் அடிப்படையில் மாணவனே எழுந்திடு..! மாற்றத்திற்க்கு வித்திடு..!! என்ற கொள்கை முழக்கத்துடன் இந்தியா முழுவதும் மாணவர்களை உறுப்பினர்களாக இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 20 வரை கேம்பஸ் ஃப்ரண்ட்டின் மாணவர் உறுப்பினர் சேர்க்கை துவங்க உள்ளதன் துவக்க நிகழ்ச்சியாக மதுரை வக்ஃபு வாரிய கல்லூரியில் கொடியேற்று விழா மற்றும் பேருந்து நிறுத்தப் பலகை வைக்கும் விழா நடைபெற்றது கேம்பஸ் ஃப்ரண்ட்டின் மதுரை மாவட்ட தலைவர் K.சுல்தான் அலாவுதீன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயளாலர் A.சாகுல் சஹீத் வருகை தந்து கொடியேற்றி இன்றைய மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், சமூக மாற்றத்தில் மாணவர்களின் பங்கு குறித்தும் சிறப்புறை ஆற்றினார். மேலும் மாநிலத்தின் முதல் உருப்பினர் பதிவு அட்டையை மதுரை மாணவர் சதீஸ் அவர்களுக்கு வழங்கினார். இரண்டாவது உருப்பிணர் படிவம் மாணவர் சம்சுதீன் அவர்களுக்கு மாநில பொருளாலர் பக்ருதீன் அவர்கள் வழங்கினார் இறுதியாக கேம்பஸ் ஃப்ரண்ட்டின் சார்பில் வக்ஃப் வாரிய கல்லூரியின் முன்பாக பேருந்து நிறுத்த பலகை வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கேம்பஸ் ஃப்ரண்ட்டின் செயல்வீரர்களும், மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.0 comments :

Post a Comment