ஏகலைவா புரஸ்கார் விருது - 2013


மஹாபாரத காவியத்தில் கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு வில்வித்தை மற்றும் பிற போர் பயிற்சிகளை கொடுப்பதற்காக துரோனாசாரியா என்ற ஆசிரியர் நியமிக்கப்படுகிறார். இந்த கவுரவர்களும் பாண்டவர்களும் அன்றைய காலத்தில் உயர் சாதியினராக இருந்தனர். இந்த துரோனாசாரியாவும் உயர் சாதியை சார்ந்தவர் தான். துரோனாசாரியாவின் மாணவர்களில் அர்ஜீனன் என்பவர் வில்வித்தையில் தலை சிறந்த மாணவனாக விளங்கினான். துரோனாசாரியாவும் அர்ஜீனனின் வில்வித்தையை கண்டு மிகவும் பூரிப்படைந்தார். துரோனாசாரியாவுக்கு அர்ஜுனனே அனைத்து மாணவர்களிலும் பிரியமுள்ள மாணவனாக திகழ்ந்தார்.

இந்நிலையில் தான் ஏகலைவன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் ஒருவன் வில்வித்தை பயிற்சி பெறுவதற்காக துரோனாசாரியாவிடம் வருகிறார். அக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இது போன்ற பயிற்சிகள் கொடுக்கப்பட மாட்டாது. எனவே துரோனாசாரியாவும் ஏகலைவனை புறக்கணிக்கிறார். ஏகலைவணுக்கு வில்வித்தையை கற்றுக்கொடுக்க சாதியின் அடிப்படையில் மறுத்து விடுகிறார். எனினும் இந்த புறக்கணிப்பு ஏகலைவனின் ஊறுதியை குலைக்கவில்லை. வில்வித்தையை படித்தே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தான் ஏகலைவன். துரோனாசாரியாவையே தனது மானசீக ஆசிரியாக ஏற்றுக்கொண்டு சுயமாகவே வில்வித்தையை கற்க பயிற்சி எடுக்கிறான் ஏகலைவன். ஏகலைவனின் உள்ளத்தில் வில்வித்தையை படித்தே ஆக வேண்டும் என்ற இலட்சிய நெருப்பு அவனது கனவை ஒரு நாள் மெய்ப்படுத்தியது. ஆம், ஏகலைவன் ஒரு சிறந்த வில் வீரனாக திகழ்ந்தான். மேலும் வில்வித்தையில் துரோனாசாரியாவின் பாசமிகு மாணவனான அர்ஜீனனையும் மிஞ்சி விடுகிறான்.


ஏகலைவனின் இந்த திறமை துரோனாசாரியாவை மிகவும் கவலைக்குள்ளாகியது. எப்படி ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவன் அனைத்து உயர் சாதியினரையும் விஞ்சி நிற்க முடியும் என்று எண்ணி புழுங்கினார். அவரால் ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் தனது சிறந்த மாணவனான அர்ஜீனனை விஞ்சியதை ஏற்றுகொள்ள முடியவில்லை. ஆனால் அது தான் உண்மை. அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்ற நிலையில் ஒரு சதித்திட்டத்தை தீட்டுகிறார். ஏகலைவன் தன்னை தான் மானசீகமாக குருவாக ஏற்றுக்கொண்டான் என்பதை அறிந்து ஏகலைவனிடம் குருதட்சனை தரவேண்டும் என்று துரோனாசாரியா கேட்டார். பாவம் ஏகலைவன், துரோனானசாரியாவின் சதியை புரிந்து கொள்ளவில்லை. துரோனாசாரியாவிடம் தாங்கள் விரும்பும் குருதட்சனையை தாராளமாக கேளுங்கள் என்று கூறவே, துரோனாசாரியா குருதட்சனையாக ஏகலைவனின் கட்டை விரலையே கேட்டார். ஏகலைவன் குருதட்சனையை கொடுப்பது தான் தர்மம் என்ற உயர்ந்த எண்ணத்தில் தனது கட்டை விரலை அறுத்து துரோனாசாரியாவுக்கு காணிக்கையாக கொடுத்தார். இது மகாபாரதத்தில் இடம் பெறும் ஒரு சம்பவம்.


பிறப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவராக கருதப்பட்ட ஏகலைவனின் முன்னேற்றத்திற்கு முட்டுகட்டைகளை போடப்பட்டது. அதை உடைத்து எறிந்து ஏகலைவன் முன்னேறியபோதும் துரோனாசாரியாவின் குயுத்தியினால் ஏகலைவன் கீழே இறக்கப்பட்டான். இது வெறும் கதையானாலும் இது தான் அன்றைய காலத்தில் இருந்த சூழ்நிலை. வரலாற்றில் ஏகலைவன் போன்ற எத்தனையோ திறமையானவர்கள் தாழ்த்தப்பட்டவன் என்ற அடிப்படையில் நசுக்கப்பட்டார்கள். சுமார் 2000 ஆண்டுகளாக நசுக்கப்பட்ட இந்த தாழ்த்தப்பட்ட சமூகம், இன்றளவும் தனது திறமைகளை வெளியே கொண்டுவர இயலாமல் திண்டாடிகொண்டிருக்கிறது. மகாபாரத கதையில் ஏகலைவன் சாதித்தது போல் இன்றும் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது திறமைகளை வெளியே கொண்டுவரும் இலட்சிய நெருப்பினை நெஞ்சில் ஏற்றும் போது, நிச்சயம் உயர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக தான் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏகலைவா புரஸ்கார் என்ற விருதை வழங்க முடிவு செய்துள்ளது.


சமூக நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நமது நாட்டில் துரோனாசாரியா மற்றும் அர்ஜீனன் பெயரில் பல விருதுகள் வழங்கப்படுகிறது. ஆனால் ஏகலைவன் பெயரில் இன்றும் கூட அரசு விருதுகள் வழங்குவதை பரிசீலிக்காதது வியப்பாக இருக்கிறது.


கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் படிப்பிலும், விளையாட்டு, கலை போன்றவற்றில் சிறந்து விளங்கும் ஒரு தாழ்த்தப்பட்ட அல்ல பிற்படுத்தப்பட்ட மாணவனுக்கு இந்த விருதை வழங்கும். இந்த பரிசு தொகை மற்றும் விருது ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பல ஏகலைவர்களை உருவாக்கும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் நம்புகிறது.


வரும் நவம்பர் 24 ஆம் தேதி தமிழகத்தில் சென்னையில் தேர்வு செய்யப்பட்ட மாணவனுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதிற்காக கல்வி மற்றும் கலையில் சிறந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதிற்கு விண்ணப்பிக்க பின்வரும் விதிமுறைகள் அமைக்கப்பட்டது.

1. ஏகலவைõ விருதாக பரிசு தொகை ரூ.5000 மற்றும் ஒரு விருது வழங்கப்படும்

2. உடல் ஊனமுற்ற மற்றும் குஇ/குகூ, Oஆஇ சிறுபான்மை சமூகத்தை சார்ந்த ஏழ்மையான
தகுதிவாய்ந்த மாணவர்கள் இவ்விருதிற்காக விண்ணப்பிக்கலாம்
3. 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் இறுதியாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

4. கலை மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கியிருக்க வேண்டும்

5. மாணவர்கள் இவ்விருதிற்காக நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது யாராவது மாணவ
மாணவிகளின் பெயரை பரிந்துரைக்கலாம்.

6. விண்ணப்ப தாரர்கள் பின்வரும் சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைக்க வேண்டும்.

1) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்
2) விளையாட்டு அல்லது கலை போன்றவற்றில் சிறந்து விளங்கியதற்கான சான்றிதழின் நகல்
3) சாதி சான்றிதழின் நகல்
7. விண்ணப்பிக்க கடைசி நாள்  9-நவம்பர் 2013
8. விண்ணப்பங்கள் சென்னை கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும் -
, 184/229, Linghi chetti st, Mannady, Chennai - 600 001. Mobile - 96770 72050
9. விண்ணப்பம் கேம்பஸ் ஃப்ரண்டினுடைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது மாநில அலுவலகத்திலிருந்து பெறலாம் .




0 comments :

Post a Comment