Labels:

எஸ்.ஆர்.எம். நிர்வாக அலுவலக முற்றுகை

மதசார்பற்ற இந்திய நாட்டில் பல மத நம்பிக்கை கொண்ட மாணவர்கள் பயிலும் எஸ்.ஆர்.எம்.பல்கலைகழகத்தில் .தன்னை இந்து தேசியவாதி என்று மத சார்புடைய பாஸிச சித்தாந்தம்கொண்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எஸ்.ஆர்.எம்.பழகலைகழக பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது மாணவர்கள் மத்தியில் ஒரு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு மோடி திருச்சி வந்த போது பதற்றமான சூழலை உருவாக்கி கட்டாயப்படுத்தி திருச்சி நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களை காவல் துறையினர் மூட வைத்த செய்தியை அனைத்து பத்திரிக்கைகளும் வெளியிட்டிருந்தன. இதனை எதிர்த்து கேட்ட மாணவர்கள் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டனர். அமைதியை விரும்பிய பெரியார் அண்ணா போன்றோர் வாழ்ந்த மண்ணுக்கே இது அவமானம் .மேலும் பாஸிச சித்தாந்தம் கொண்ட ஒரு நபர் தமிழகத்தில் உள்ள பல்கலைகழகத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகை தருவது தமிழகதில் ஒற்றுமையோடு இருக்கும் மாணவர்கள் மத்தியில் பிளவை உண்டாகும் அபாயம் உள்ளது.எனவே கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இதை வன்மையாக கண்டிக்கின்றது  9.02.2014 அன்று காலை 10:30  மணியளவில் எஸ்.ஆர்.எம். பல்கலைகழக அலுவலகத்தை  முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தப்பட்டது
ஃபாஸிசத்தை மாய்ப்போம் !
குடியரசை காப்போம்!






0 comments :

Post a Comment