Labels:

முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை போரட்டம்





முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை போரட்டம் – 
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி முதல் மேல்நிலைப்பள்ளி வரை இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச்சட்டம்.இன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ,மாணவியரும் இந்த சட்டத்தின் மூலம் இலவச கல்வியை நடைமுறைப்படுத்துவதில் மத்திய,மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இன்று ஆர்வம் காட்டுவது இல்லை.

இந்நிலையில் தனியார் பள்ளிகளும் சுயநலத்தோடு 25% இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவது இல்லை.இதை கண்டித்து மத்திய,மாநில,மாவட்ட கல்வி அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் K.S.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்ட்த்தில் மாவட்ட பொதுச் செயலாளர் A.முஹமது சேக் மீரான்@காமில்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூசுஃப் ரஹ்மான் உட்பட திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தீர்மானம் :
1.கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
2.பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சார்ந்த குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் நிரப்பப்படுதை மாவட்ட கல்வி நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும்.



0 comments :

Post a Comment