Labels:

முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை போரட்டம்










இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி முதல் மேல்நிலைப்பள்ளி வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச்சட்டம்.இன்று பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ,மாணவியரும் இந்த சட்டத்தின் மூலம் இலவச கல்வியை நடைமுறைபடுத்துவதில் மத்திய,மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இன்று ஆர்வம் காட்டவில்லை.இந்நிலையில் தனியார் பள்ளிகளும் சுயநலத்தோடு 25% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது இல்லை.இதை கண்டித்து மத்திய,மாநில,மாவட்ட கல்வி அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா-கோவை மாவட்டத்தில் 19/05/2015 அன்று 3.30 மணி அளவில் டவுன்ஹாலில் இந்த முற்றுகை பேராட்டம் நடைபெற்றது.கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் பீர் முகமது தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.இதில் கோவை மேற்கு மாவட்ட தலைவர் அஷ்ரஃப்,கோவை தெற்கு மாவட்ட தலைவர் சாகுல்ஹமீது,கோவை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ரிலா,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் செயல்வீரர்கள் உட்பட திரளான மாணவர்களும் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர் .

பின்வரும் கோரிக்கைகள் வைக்கபட்டன;
1.கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும்.
2.கல்வி உரிமைச் சட்டத்தில் பொருளாதார ரீதியில் நலிந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு 25%இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி அளிப்பதை உறுதி படுத்த வேண்டும்.

0 comments :

Post a Comment